Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அகதிகளுக்கான முகாம் மூடல்:ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு!

ஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக சென்று, அந்நாட்டில் புகலிடம் கோரும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களுக்காக இருந்த முகாம் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியா, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், ஈராக்கைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள்  ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்படுவதாக, ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில், ஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் பப்புவா நியூகினி பீட்டர் ஓ நீல்-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட   பீட்டர் டட்டன், "இந்த தடுப்பு முகாமில் உள்ள எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள்" எனக்  குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த முகாமில் 854 பேர் அகதிகளாக உள்ளனர் என்று தெரியவருகிறது. முகாம் மூடப்படுவதையடுத்து, இவர்கள் அனைவரும் இடம் மாற்றப்படுவார்கள் எனச் சொல்லியுள்ளது  ஆஸ்திரேலிய அரசு.

இந்நிலையில்,  ஆஸ்திரேலியாவை அடைய முயன்ற ஆறு பேரைக் கொண்ட இலங்கை படகு ஒன்று மீண்டும் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற அகதிகள் படகு எதுவும் அந்த நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close