Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுட்டெரித்த ஜூலைதான் பூமியின் வெப்பம் அதிகமான மாதம்! #World's Hottest Month

                                   

டந்த ஐந்து ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் மற்றொரு படியாக, ஜூலை மாதம்தான் வெப்பம் அதிகமான மாதம் என அமெரிக்க அரசின் விஞ்ஞானிகள் அடங்கிய ‘தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்’ தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு மாதத்தை 'அதிக வெப்பமான மாதம்' என அறிவிப்பது இது முதல்முறையல்ல.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, கடந்த ஜூலை மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் தனது அதிகபட்ச வெப்பநிலை சாதனையை முறியடித்துக் கொண்டே வருகிறது.


தற்போது 'வரலாற்றிலேயே அதிக வெப்பமான மாதம் இந்த ஆண்டின் ஜூலைதான் ' என நாசாவும் தனது காலநிலை தகவலை வெளியிட்டுள்ளது. வெப்ப அளவினை பதிவு செய்யும் முறை  நடைமுறைக்கு வந்த 1880-ம் ஆண்டு முதல், இப்போது வரையிலான வெப்ப அளவு கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வெப்பநிலை கணக்கீட்டில், இந்த ஆண்டினுடைய ஜூலை மாதத்தில், அதிக‌ட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நாசா தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள வெப்பநிலைகளின் அளவீட்டின் படி, 1951-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரையில் சராசரியாக பதிவான வெப்பநிலையை விட இந்த ஆண்டின் (2016) ஜூலை மாதத்தில் 0.84 சென்டிகிரே‌ட் வெப்பம் அதிகமாகவும் பதிவாகி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த வெப்பநிலை 137 ஆண்டு கால வெப்பநிலையை விட அதிகம். மேலும் அதில், " ஜூலை மாதம் இயல்பாகவே வெப்பம் அதிகமாகவே காணப்படும். இந்த ஆண்டும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமான வெப்பநிலையே பதிவாகி உள்ளது. ஆனால், கடந்த ஜூலை மாத வெப்பநிலை 20–ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகவே இருந்தது. இதற்கு எல் நினோவும் ஒரு காரணமாக இருக்கலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                         


இதே தகவலை, அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் தெரிவித்துள்ளது. " இதே வெப்பநிலை நீடித்தால் 2016 -ம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பத்தை பதிவு செய்த ஆண்டாக இருக்கும்" என்ற தகவலை ஆஸ்திரேலியாவின் 'காலநிலை விஞ்ஞானி' டேவிட் கரோலியும் தெரிவித்துள்ளார்.  உலக வெப்பமயமாகுதல் மற்றும் எல் நினோ ஆகியவை இணைந்து பசிபிக் பகுதியில் அதிக வெப்பத்தை உருவாக்கியதால் வெப்பநிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


- துரை.நாகராஜன் 


 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ