Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

104 விடுதலைப்புலிகள் விஷ ஊசி போட்டுக் கொலையா..?!

கொழும்பு: இலங்கை மறுவாழ்வு முகாம்களில் இருந்த 104 விடுதலைப்புலிகள், விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை அமெரிக்க மருத்துவக் குழுவினர் விசாரிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த போர்க்குற்றங்கள் பற்றியும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேச அளவிலான விசாரணை நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.

மேலும், போர் முடிவுக்கு வந்த பின் ஏராளமான தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்படி தங்க வைக்கப்பட்டவர்களில், முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களும் அடங்குவார்கள்.

அப்படி மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகளுக்கு, விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதில் 104 பேர் மரணம் அடைந்ததாகவும், மற்றவர்கள் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபற்றிய தகவல் அங்குள்ள ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ''இலங்கை அரசின் மறுவாழ்வு முகாம்களில்  வைக்கப்பட்டு இருந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதால் அவர்கள் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால், தற்போது இலங்கையின் வடக்கு பகுதியில் முகாமிட்டு இருக்கும் அமெரிக்க விமானப்படையின் மருத்துவக் குழுவினர், அவர்களுடைய உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்" என்றும் கூறி இருக்கிறார்.

ஆனால், விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை ராணுவ அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே மறுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ''இலங்கையின் வட பகுதியில் வசிக்கும் மக்களின் (தமிழர்கள்) பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

இலங்கை அரசின் அனுமதி பெற்று, சர்வதேச சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் மறுவாழ்வு முகாம்களுக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்" என்று கூறி உள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close