Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் காயம்பட்ட 5 வீரர்களும், பின்னே ரசிகர்களும்...! #QuickRead

லகமே ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இனிதே நிறைவடைந்துவிட்டன. நாம் ஒலிம்பிக்கின் சந்தோஷமான நிகழ்வுகளைக் கொண்டாடிய அதே நேரத்தில்தான், சில மோசமான நிகழ்வுகளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரங்கேறின.

அவற்றுள் சில...

சமீர் எய்ட் (Samir Ait):

பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஜிம்னாஸ்டிக் வீரரான சமீர் எய்ட், ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே போட்டியின்போது தவறுதலான லேண்டிங்கால் தனது காலை முறித்துக்கொண்டார்.

ஆண்ட்ரானிக் கராபெட்யன் (Andranik Karapetyan):

இரண்டாவது வாய்ப்பின்போது 195 கிலோ பளுதூக்கும் போட்டியில், எடையைத் தூக்கிய ஆர்மேனிய வீரரான ஆண்ட்ரானிக் கராபெட்யன்-க்கு இடது கை முறிந்தது.

கிம் மைக்கேல் (Kim Mickle):

அவுஸ்திரேலிய வீராங்கனையான கிம் மைக்கேல்க்கு ஈட்டி எறிதலின் கடைசி தகுதி சுற்றுப் போட்டியின் போது வலது பக்க தோல் பட்டை விலகியது.

டால்கட் இலியாசவ் (Talgat Ilyasov):

ஆஸ்திரேலிய வீரரான இவர், மல்யுத்தப் போட்டியில் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டபோது கைப்பகுதியின் மூட்டு விலகியது.

யோகன் டினிஸ் (Yohann Diniz):

பிரான்ஸ் வீரரான யோகன் டினிஸுக்கு வயிற்றுப்போக்கு இருந்தபோதும் 50 கி.மீ ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டார். எனினும், வயிற்றுப்போக்கினால் ஏற்பட்ட சக்தி குறைபாடால் நிலைதடுமாறிக் கீழே விழுந்தார்.

ரசிகர்கள் பலத்த காயம்!

மகிழ்ச்சியாக விளையாட்டைக் கண்டுகளித்த ரசிகர்களின் மேல் 65 அடி உயரத்தில் சுற்றுத்திரிந்த ஸ்பைடர் கேமரா அறுந்து விழுந்தது. இதில், ஏழு ரசிகர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், சில ரசிகர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

- ஜெ.அன்பரசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ