Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது! - இலங்கை திட்டவட்டம்

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எக்காரணத்திற்காகவும் விடுவிக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மீனவர்களின் சந்திப்பு கூட்டத்தில், இலங்கை கடல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கலந்து கொண்டு உரையாற்றும்போது, ''வருகின்ற 25-ம் தேதி முதல் இலங்கை கடல் பகுதியில் இழுவை படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறும் மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் மீன்பிடி அனுமதி உரிமமும் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னையை மெதுவாக தான் கையாள வேண்டும். ஏன் என்றால், அதில் தமிழக அரசியல்வாதிகளின் பங்கு உள்ளது. இலங்கை மீனவர்களுக்கும், கடல் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படாதபடி, மீனவர் பிரச்னை குறித்து, இந்திய மற்றும் தமிழக அரசுடன், இலங்கை அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

இலங்கை கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் விடுவிக்கப்படவில்லை. இதுவரை இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீனவர்களின் 130 படகுகளை எக்காரணத்திற்காகவும் விடுவிக்க முடியாது" என்றார்.

இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு, தமிழக மீனவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ