Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிங்கப்பூர் தமிழர்களின் அடையாளம் முன்னாள் அதிபர் நாதன் காலமானார்

 

சிங்கப்பூர் அதிபராக இருமுறை பதவி வகித்த தமிழர் எஸ்.ஆர். நாதன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92

புலம் பெயர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன், இளம் வயதில் வறுமை காரணமாக வேலைபார்த்துக் கொண்டே படித்தவர். மொழிபெயர்ப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாதன், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் என்ற நிலைக்கு உயர்ந்தார். 1999ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நாதன், 2011 வரை அப்பதவியில் தொடர்ந்தார்.

உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட போது, அதனால் சிங்கப்பூர் பாதிக்கப்படாமல் காத்ததுடன், தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயனிக்கவும் எஸ்.ஆர். நாதன் உத்திகளை வகுத்துக் கொடுத்தார்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவால் நேற்றிரவு நாதன் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "நாதன் மறைவு செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். சிங்கப்பூரில் தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்,  சிங்கப்பூர் குடிமக்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ