Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாவூத் பாகிஸ்தானில் தான் உள்ளார்..! - இந்திய ஆதாரங்களை உறுதி செய்தது ஐ.நா.

நியூ யார்க்: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் வசித்து வருவதாக இந்தியா அளித்த தகவல்களை ஐ.நா. அமைப்பு உறுதி செய்துள்ளது.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டது. இதில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 700 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவராக, முக்கியக் குற்றவாளியாக குற்றம் சட்டப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மை இந்தியா கடந்த 20 வருடங்களாக தேடி வருகின்றது. மேலும், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக இந்தியா தொடர்ந்து கூறி வருவதை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது.

இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருவதற்கு ஆதாரமாக, அவருடைய 9 முகவரிகளை ஐ.நா. அமைப்பிடம் இந்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தது. பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிம், அவ்வப்போது தனது வசிப்பிடத்தை மாற்றிக் கொள்வதாகவும் இந்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது.

இதையடுத்து, அந்த முகவரிகளை ஆய்வு செய்த ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் கமிட்டி, இந்திய அரசு அளித்திருந்த 9 முகவரிகளில் 6 முகவரிகளில் தாவூத் இப்ராஹிம் வசித்து வந்ததை உறுதி செய்துள்ளது. மற்ற 3 முகவரிகள் தவறானவை, குறிப்பாக கராச்சியில் உள்ள மார்கல்லா சாலை முகவரியில் தாவூத் இப்ராஹிம் வசிக்க வில்லை. அது ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதியின் முகவரி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close