Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ரோம்: இத்தாலி நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெருகியா மாகாணத்தின் நார்சியா நகரின் தென்கிழக்கே சுமார் பத்து கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், பீதி அடைந்து தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வீதிகளிலும், திறந்தவெளியிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பு தொடர்பான தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகாத நிலையில், இந்த நிலநடுக்கம், அங்கிருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள ரோம் நகரம் வரையில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close