Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோத்தபய ராஜபக்சே மீது மீண்டும் ஊழல் வழக்கு!

கொழும்பு: ரூ.500 கோடி மோசடி செய்ததாக ராஜபக்சே தம்பி கோத்தபய மீது மீண்டும் ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர், ராஜபக்சேவின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்தார். கடந்த 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி ஏற்றார். அதன்பின், ராஜபக்சே மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது.

அப்போது, மிதக்கும் ஆயுத கிடங்கை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் இருந்து 3 ஆயிரம் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவை காலே துறைமுகத்தில் 20 கண்டெய்னர்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில், ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு தொடர்பு இருப்பதாக கருதி அவரை கைது செய்து வழக்கு தொடரப்பட்டது. பின் அந்த வழக்கை விசாரிக்க அரசு விரும்பவில்லை என கூறி வழக்கை வாபஸ் பெற்றது.

மேலும் கோத்தபய ராஜயபக்சே மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அம்பந்தோட்டை கடற் பூங்காவை அமைப்பதற்காக லங்கா மினரல் சான்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து 400 லட்சம் ரூபாய் பணத்தை கோத்தபய ராஜபக்சே பெற்றுக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே மீது மீண்டும் ஒரு ஊழல் வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது, காலே துறைமுகத்தில் அமைந்திருந்த மிதக்கும் ஆயுத கிடங்கு தனியாருக்கு காண்டிராக்ட் விடப்பட்டு இருந்தது. அதனால், அரசுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறி தற்போது கோத்தபய ராஜபக்சே மற்றும் 7 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ