Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூசிலாந்தில் கொள்ளையைத் தடுக்க முயன்ற இந்தியச் சிறுமி!

நியூசிலாந்தில் கொள்ளைச் சம்பவத்தை தடுக்க முயன்ற 6 வயது இந்தியச் சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ஆக்லாந்தில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஊழியர்களைத் தாக்கி கொள்ளையில் ஈடுபட்டனர். முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் கடை ஊழியர்களை கடுமையாகத் தாக்கினர். பின்னர் கடையில் இருந்த ஆயிரம் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

கொள்ளைச் சம்பவம் நடந்த போது, இந்தியச் சிறுமி சாரா  தனது தாத்தாவுடன் அந்த கடையில் இருந்தார். கொள்ளையர்கள் கடை ஊழியர்களைத் ஆயுதங்களால் தாக்கிய போது, அதனைத் தடுக்க சாரா முயன்றுள்ளார். பின்னர், தனது தாத்தாவை கடையில் இருந்து பாதுகாப்பாக வெளியே கூட்டிக் சென்றுள்ளார். இந்த காட்சிகள் கடையில், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

 

                                  

 

போலீஸ் விசாரணையில் சிசிடிவி கேமராவில், சாரா கொள்ளையர்களைத் தடுக்க முயன்றது கண்டு போலீசார் வியப்புற்றனர். தற்போது இணையங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அத்துடன், கொள்ளையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்களைத் தடுக்க முயன்றது குறித்து நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிகைக்கு சாரா அளித்த பேட்டியில், 'நான் அந்த மோசமான மனிதரை கண்டு பயப்படவில்லை. அவரால் தாக்கப்பட்டவரைக்  காப்பற்ற முயற்சித்தேன் ' என கூறியுள்ளார்.

சாராவின் தந்தை சுகாய்ல், தனது மகளின் செயலால் பெருமைப்படுவதாக கூறியுள்ளார். 'எனது மகள் எப்போதுமே அடுத்தவர்களுக்கு உதவி புரிய நினைப்பாள். அதனால், இந்த சம்பவம் குறித்து நான் வியப்படையவில்லை. சம்பவம் நடந்த இரவும் கொஞ்சம் அப்செட்டாகி இருந்தாள். 'நீதான் தைரியமான பெண் ஆயிற்றே ' என்று அவளை தேற்றினோம். தற்போது அந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து விட்டாள் '' என்றார்.

உலகம் முழுக்க பல மீடியாக்கள் சாராவின் தைரியத்தை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

-எம். குமரேசன்

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ