Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் 100 கோடி... லீ-ஈகோவின் ஆன்லைன் அதிரடி!

                      

பெரும்பாலும் கடைகள் அதிகமாக இருந்தாலும், அனைவரும் விரும்புவது ஆன்லைன் ஷாப்பிங் தான். ஆன்லைன் சந்தை விற்பனையில் மிகப் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது லிஇகோ நிறுவனம். சீனாவைச் சேர்ந்த இந்நிறுவனம் தன் பயனாளர்களைக் கவரும் வகையில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி EPIC - 919 என்னும் விற்பனைத் திருவிழாவை லிமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய விற்பனை தளங்களில் தொடங்கியது. பயனாளர்ளிடையே இருந்த அதிக வரவேற்பு காரணமாக தன் விற்பனையை 12 மணிநேரத்திலிருந்து 24 மணி நேரமாக நீட்டித்தது. இது உலக அளவில் ஆன்லைன் விற்பனையில் 100 கோடிக்கும் மேல் விற்பனையை எட்டியுள்ளது. இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களிலேயே ’’முன்னணி ஆன்லைன் பிராண்டு’’ என்ற சிறப்பு அந்தஸ்தையும் லிஇகோ தொழில் நுட்ப நிறுவனம் பெற்றுள்ளது.

     70 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் ஃபோன்கள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான டி.விக்கள் விற்பனை என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதர கருவிகளை இந்த விற்பனை திருவிழாவில் விற்பனை செய்து, இந்நிறுவனம்  சாதனை புரிந்துள்ளது. அதிகப்படியான சலுகைகள், இலவச அறிவிப்புகள், பட்ஜெட்டுக்கேற்ற மலிவு விலை, தரமான கருவிகள் ஆகிய காரணங்களால்தான் குறுகிய காலத்தில் அதிக விற்பனையை எட்டியிருக்கிறது என்கிறது, இந்த லிஇகோ நிறுவனம்.

                                

 மேலும், புதிய அம்சங்கள் மற்றும் குறைந்த விலையில் கருவிகளை வழங்கியதால் சந்தையில் போதிய வரவேற்பினை பெற்றுள்ளது. டி.விக்களின் விற்பனையிலும் லீகோ முதலிடம் பிடித்திருப்பதாகவும், உலக அளவில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய முதல் ஆன்லைன் விற்பனைத் திருவிழாவின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பயனாளர்களுக்கு இன்னும் சிறப்பான தள்ளுபடியையும், அதிக தரமுள்ள கருவிகளை வழங்குவோம். இந்தியாவில் உள்ள அதிகப்படியான பயனாளர்களால்தான் இந்த அளவு விற்பனை சாத்தியமாகியுள்ளது என்றும், ஆன்லைன் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ எனவும் லீகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

-இ.கார்த்திகேயன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close