Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘தீவிரவாதம், இனவெறித் தாக்குதல், ஒபாமா சர்ச்சை...!’ - அனல் பறந்த ஹிலரி - டிரம்ப் நேருக்கு நேர்

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக  கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளின்டன் மற்றும் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற அனல் பறக்கும் முதல் விவாதம் நியூயார்க்கில் இன்று காலை நடைபெற்றது.   

அமெரிக்க மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை மட்டும் வேறுபட்டதல்ல, அங்குள்ள அரசியல் அமைப்பும் தேர்தல் நடைமுறைகளும்கூட வேறுபட்டதே. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இங்கு அதிபர் தேர்தல் நடைபெறும். தற்போது அதிபராக உள்ள குடியரசுக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடியவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
அமெரிக்காவின் இரு பிரதானக் கட்சிகளான குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரும் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையின்படி, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, அயல்நாட்டு உறவு போன்ற பல்வேறு தலைப்புகளில் நேருக்கு நேர் விவாதம் செய்வர். இந்த ஆண்டுக்கான விவாதம் நான்கு கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  அதன்படி முதல் விவாதம் இன்று நியூயார்க்கில் உள்ள ஹொப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில், NBC செய்தி நிறுவனத்தின் நெறியாளர் லெஸ்டர் ஹோல்ட் முன்னிலையில் 6 கட்டங்களாக மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசப்பட்ட முக்கியமான விஷயங்களைக் காணலாம்.

    1. வரிவிதிப்பு முறை

இரு அதிபர் வேட்பாளர்களுமே தற்போதைய வரிவிதிப்பு முறையில் மாற்றம் தேவையென வாதிட்டனர். “கோடீஸ்வரர்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு அதிகரிக்கப்படும்” என ஹிலரி உறுதியளித்தார். அவர் மேலும் டிரம்ப் ஏன் தனது வருமானவரிப் பற்றிய அறிக்கையை வெளியிடவில்லையென கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த டிரம்ப் ''ஹிலரி தொடர்ந்து மறைத்து வரும் 33,000 மின்னஞ்சல்களை பகிரங்கமாக வெளிட்டால், நான் எனது வருமான அறிக்கையை உடனடியாக வெளியிடத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

    2. தீவிரவாதம்

''ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக்கில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் போது உருவானது. அது மேலும் சிரியாவில் காலூன்றி தீவிரவாதத்தை பரப்பி வருவதை முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் தடுக்க தவறிவிட்டார்'' என்று டிரம்ப் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த ஹிலரி ''நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கப் படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும்'' என்றதோடு ''சிரியாவில் இருந்தும் படைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்''  என்றார்.

 

   3.  இனவெறித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரம்

அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கறுப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஹிலரி பேசியபோது, “மக்கள் மற்றும் போலீஸ் இடையேயான உறவு பலப்படும் வகையில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தவறானவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கி பறிக்கப்படும்'' என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், ''தற்போது நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு அநீதி  இழைக்கப்படுகிறது'' என்றார்.

  4.   வேலைவாய்ப்பு

''சீனா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை பறித்துச் செல்வதை தடுத்து அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்'' என்று டிரம்ப் தெரிவித்தார். அடுத்துப் பேசிய ஹிலரி, ''வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான வாய்ப்பும், ஊழியர்களுக்கு உரிய விடுமுறையும் வழங்கப்படுவதுடன், புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


5. ஒபாமா பிறப்பு பற்றிய சர்ச்சை

ஒபாமாவின் பிறந்த இடம் பற்றிய சர்ச்சையை கிளப்பிய பின்னரே டிரம்ப் தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக்கொண்டதாக கூறிய ஹிலரி, இதன் மூலம் நமது நாட்டின் முதல் கறுப்பின அதிபரான ஒபாமாவை டிரம்ப் அவமதித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த டிரம்ப் 2008-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு கட்சிக்கான அதிபர் வேட்பாளர் போட்டியின்போது ஒபாமாவின் மீது ஹிலரி வைத்த தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்டார். மேலும் அப்போதே ஒபாமாவின் பிறப்பிடம் பற்றியத் தகவலை பெறுவதற்கு ஹிலரி தவறிவிட்டதாகவும் கூறினார்.   

-ஜெ. சாய்ராம்,
மாணவப் பத்திரிகையாளர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close