Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்: ட்ரம்ப் - ஹிலரி இருவரில் ஹிட் அடித்தது யார்? #PresidentialDebate

நவம்பர் 8ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல், அதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அதிபர் வேட்பாளர்களான ஹிலரி க்ளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் ஒரே மேடையில் அதிபர்  தேர்தல் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதம் சமூக வலைதளங்களில் நேற்றைய தெறி வைரல் ஹிட். 

90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் பரஸ்பரம் கைகுலுக்கி விவாதத்தை துவங்கினர். அந்த புகைப்படமே ஆன்லைனில் வைரலாக துவங்கியது. இருவரது ப்ளஸ், மைனஸ்களை இருவரும் பேச சமூக வலைதளங்கள் வைரலாகியது. 

நேற்றைய விவாதத்தின் சில புள்ளிவிவரங்கள்:

1. இந்த விவாதம் 12 தொலைகாட்சி நெட்வொர்க்குகள் மூலமாக சுமார் 81 மில்லியன் பேர் இந்த விவாதத்தை கண்டுள்ளனர். இது தவிர ஆன்லைன் யூ-ட்யூப் சேனல்கள், பைரஸி தளங்கள் மூலமாகவும் இந்த விவாதம் வைரலானது. மொத்தமாக சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமாக இந்த விவாதம் பார்க்கப்பட்டுள்ளது. இது தான் இதுவரை நடைபெற்ற அமெரிக்க அதிபர் விவாதங்களில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட விவாதமாகும்.

2. சமூக வலைதளங்களில் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக ட்ரம்ப்பை குறிப்பிட்டு 30000 பதிவுகளும், ஹிலரியை குறிப்பிட்டு 24000 பதிவுகளும் பதிவாகியுள்ளது. 

FULL First Presidential Debate Donald Trump vs Hillary Clinton At The Hofstra University 9/26/2016

 

3. அதிகம் ட்விட் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதமும் இது தான். மொத்தமாக 35 லட்சத்துக்கும் அதிகமான முறை டரம்ப் மற்றும் ஹிலரியை குறிபிட்டு ட்விட் செய்யப்பட்டுள்ளன.

4. ட்விட்டரில் இவர்கள் பெயர் குறிப்பிட்ட ட்விட்கள் மொத்தம் 170 கோடி பேரின் டைம்லைனில் பார்க்கப்பட்டுள்ளது.

5. ஹிலரியின் பெயரை குறிப்பிட்டு 1.2 மில்லியன் ட்விட்டுகளும், ட்ரம்ப் பெயரை குறிப்பிட்டு 1.8 மில்லியன் ட்விட்டுகளும் பதிவாகின. ட்ரம்ப் குறித்த மீம்ஸ்கள் அதிகம் பரவின என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ட்ரம்ப்க்கு இருக்கும் ஆதரவு என்பதை தாண்டி அவரை பற்றிய விவாதங்களும், விமர்சனங்களும் தான் அதிகமாக உள்ளது.

இந்திய மக்களை தேர்தல் 2014ம் ஆண்டு நடைபெற்ற போது, மோடிக்கு சமூக வலைதளங்களும் பிரதமராவது ஒரு பங்களிப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளால் சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. அதேபோல் தான் தற்போது அமெரிக்க தேர்தலில் ஹிலரியை விட ட்ரம்ப் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார்.

நேற்றைய நேரடி விவாதத்தில்ஹிலரியின் சாதுர்யமான பதில்களுக்கும் வரவேற்பு இருந்தாலும் வைரல் மெட்டிரியல் ட்ரம்ப் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

நேற்றைய விவாதத்தின் சில ஜாலி ட்விட்ஸ்:

 

ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ