Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈஃபில் டவரும் 11 சிதம்பர ரகசியங்களும்!


ஈஃபில் டவர். போன வருஷம் (2015) 70 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்ட உலக அதிசயங்கள்ல ஒன்னு. வருஷாவருஷம் அதிக சுற்றுலா பயணிகள் பார்க்குற டாப் 5 உலக சுற்றுலா ஸ்பாட்கள்ல கண்டிப்பா ஒரு இடம் ஈஃபில் டவருக்கு பார்சல் சொல்லிடலாம். அத பத்தின 11 சிதம்பர ரகசியங்கள் பாருங்களேன்.

 

1. டவர் பிளான் பார்சிலோனாவுக்கு, தப்பி வந்தது பாரிஸுக்கு :
ஆக்ச்சுவலி.... இந்த டவர ஸ்பெயின் நாட்டுல இருக்குற பார்சிலோனா நகரத்துல கட்ட, அந்த நாட்டு அரசாங்கத்துகிட்ட பிளான் காட்டப்பட்டது. இங்க இப்ப டவரும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் நீ கெளம்புன்னு சொல்லிட்டாய்ங்க. பிளான தூக்கிக்கிட்டு நேரா பாரிஸுக்கு வந்துட்டாரு. 
போச்சா சோன முத்தா....! 


2. பேர மாத்துனா தான் பிளான ஏத்துக்குவேன் :
பிளானோட பிரான்ஸ் அரசாங்க அதிகாரிகள பாக்க போனார் கஸ்டவ் போனிக்ஹாவ்ஸ் (கஷ்டமா இருக்குள்ள) GUSTAVE Bönickhause. யாரப்பா நீ...ன்னு கேட்ட உடனே அவர் தன் பேர சொன்னாரு. என்ன பேருடா இது. மொதல்ல பேர மாத்து அப்புறமா பிளான பாக்கலாம்னு சொல்லிட்டாங்க பிரான்ஸ்காரங்க. நம்ம கஸ்டவ் போனிக்ஹாவ்ஸ் அந்த நொடியில் இருந்து தான் கஸ்டவ் ஈஃபில் ஆனார். 


அப்புறம் என்ன... நல்ல நாள் பாத்து, பந்தக்கால் நட்டு, அடிக்கல் நாட்டி டவர டக்கரா கட்ட ஆரம்பிச்சிட்டாரு நம்ம இன்ஜினீயர் கஸ்டவ். கடசீல அவர் பேரயே டவருக்கும் வெச்சுட்டாய்ங்க... பிரான்ஸ் பயபுள்ளங்க. அப்பவே நியூமராலஜி வொர்க் அவுட் ஆகி இருக்கு கைய்ஸ்.
(சார் எங்க அப்பா ஊர்லேர்ந்து வந்தா சாமுன்னு கூப்பிடலாம்ல.)

3. டவரு 20 வருஷம் தாங்கணும் தம்பி :
1889-ல பிரெஞ்சுப் புரட்சியோடு 100-ஆம் ஆண்டு நினைவுக்காக எக்ஸ்போ பாரிஸ் 1889ன்னு ஒரு கண்காட்சிய நடத்த பிளான் பண்ணி இருந்த பிரான்ஸ் கிட்ட தான், நம் கஸ்டவ் கஸ்டப்பட்டு அப்பாயின்ட்மென்ட் வாங்கி, டவர கட்ட பர்மிஷன் வாங்குனாரு.
" தம்பி, கஸ்டவ், டவர் 20 வருஷம் ஸ்டராங்கா இருக்குற மாதிரி கட்டுப்பா " ன்னு சொன்னாங்க. சரி 20 வருஷத்துக்கு அப்புறம் எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கிருவாங்கன்னு தான் கட்டுனாரு. 


4. ஈஃபில் டவர் 2 டிவி டவர் : 
1900 வாக்குல பிரான்ஸ் நேவிகாரங்க, டவர் சும்மா தான இருக்குன்னு, அதுல ரேடியோ ஆன்டனாவ ஃபிட் பண்ணிட்டாங்க. அன்னைல இருந்துதான் டவர பேரீச்சம்பழத்துக்கு போட வேண்டாம்னு பிரான்ஸ் முடிவு பண்ணுச்சு. 1940 - 44 (உலகப் போர் 2) பீரியட்ல ஜெர்மனியோட சில டிவி சேனல்கள கூட இந்த ஈஃபில் டவர் மூலமா  ஒளிபரப்புனாங்கன்னா பாத்துக்கங்களேன்.


5. உலகத்துலேயே உயரமான டவர் :
பாஸ் கத உடாதீங்க உலகத்துலேயே உயரமான டவர் & பில்டிங் புர்ஜ் கலீஃபா தான்...னு சொல்றீங்களா? பொறுங்க பாஸ், 1889 - 1930 வர நம்ம கஸ்டவ் 300 மீட்டர் உயரத்துக்கு கட்டுன இந்த ஈஃபில் டவர் தான் "உலகின் மிக உயரமான டவர் ". அதுக்கு அப்புறம் அமெரிக்காவோட க்ரிஸ்லர் பில்டிங் (Chrysler Building) இந்த பட்டத்தை பறிச்சிக்கிட்டு போச்சு. 


6. 72 அடி ஆண்டனா :
இந்த டைட்டில் வாருக்கு அப்புறம் 1957-ல டிவி ஆண்டனா வெச்சு   ஈஃபில் டவரோட உயரத்த மொதல்ல 18.7 மீட்டர் அதிகப்படுத்துனாங்க. லேட்டஸ்டா 2000-ஆம் வருஷத்துல திரும்ப டிவி சிக்னல் டவர வைக்கிறேன்னு 5.3 மீட்டர் அதிகப்படுத்திட்டாங்க. ஸோ இப்புடித்தான் 300 மீட்டர் உயரமா இருந்த டவர 324 மீட்டரா உயர்த்துனாங்க. இதுல வேடிக்கை என்ன தெரியுமா, இப்போ ஈஃபில் டவர் வெறும் டவர் தான். 08 மார்ச் 2011-ல இருந்து ஈஃபில் ட்வர்ல இருக்குற ஆண்டனாவெல்லாம் எடுத்துட்டாங்க.
 

7. சம்மர்ல சீறும் ஈஃபில் டவர் :
அதெப்புடிப்பா...? வெயில்ல இரும்பு விரிவடையும் தான. அதே தான் இங்கேயும். சம்மர்ல சுர்ர்ர்ர்ருன்னு அடிக்கிற வெயில்ல 18 - 20 சென்டி மீட்டர் விரிவடையும், வின்டர்ல அந்த 18 - 20 சென்டிமீட்டர் சுருங்கிடும். இதையே சென்னைல கட்டியிருந்தா இதான் உலகின் உயரமான பில்டிங்குன்னு ஆயிருக்கும்..


8.  ஐஸ் ஸ்கேட்டிங் அரேஞ்மென்ட் :
2005-ஆம் ஆண்டுலேர்ந்து, ஈஃபில் டவரோட முதல் தளத்துல செயற்கையா ஐஸ் ஸ்கேட்டிங் செய்ய ஏற்பாடு பண்ணி இருக்காங்க பாஸ். வர்ற டூரிஸ்ட் வாஞ்சையோட ஸ்கேட் செய்யுறத பாருங்கப்பூ

9. டவர்ல விளம்பரம் :
"சிட்ரோன்"-ன்னு ஒரு கார் கம்பெனி. இந்த கம்பெனிகாரங்க மூக்கு பொடப்பா இருந்ததால சும்மா இருக்குற இந்த ஈஃபில் டவர்ல நம்ம கம்பெனி பேர நியான் லைட்டா வெச்சு  எரியவிட்டா என்ன-ன்னு யோசிக்க, அத பிராக்டிக்கலாவும் செஞ்சிட்டாங்க. இப்படி சிட்ரோன் கம்பெனி 1925 - 1934 வரை விளம்பரம் பண்ணாங்க. அன்னைய தேதிக்கு இந்த CITROEN ங்குற நியான் வெளக்கு தான் உலகத்துலேயே பெரிய நியான் சைன் போர்டு.


10. ஃபோட்டொ புடிச்சா, ஜெயில்ல போடுவேன் :
ஈஃபில் டவரோட அழகே, அத ராத்திரியில பாக்குறது தான். ஸோ, யாராவது ஈஃபில் டவரை போட்டோ பிடிச்சி பப்ளிஷ் பண்ணீங்கன்னா, ஜெயில் போட்டுடுவேன்னு பிரான்ஸ் மிராட்டுனாங்க. கொஞ்ச நாளைக்கு பயந்த மாதிரி நடிச்சுட்டு, அப்புறம் ஃபோட்டோக்களை அள்ளி அள்ளி அப்லோடு பண்ண ஆரம்பிச்சாங்க நம்ம நெட்டிசன்ஸ். நாள பின்ன, பிரான்ஸ் கவர்மென்ட்டும், கண்டுக்காம விட்டுடுச்சு. 


11. கலர் காம்பினேஷன் :
1968-ஆம் ஆண்டு தான் ரெட்டிஷ் பிரெளன் கலர்ல இருந்த டவர இப்ப இருக்குற ஈஃபில் டவர் பிரெளனுக்கு மாத்துனாங்க. டவரோட கீழ் பகுதிகள்ள டார்க் கலர்ல பெயின்ட் பண்ணாங்க.  டவரோட உச்சத்துக்கு போக போக அதே ஈஃபில் டவர் பிரெளனோட லைட் கலர் வேரியன்டகளை அடிப்பாங்க. அதனால தான் ஈஃபில் டவர் பாரிஸ் நகரத்தோட வானத்துக்கு தகுந்தா மாதிரி அழகா இருக்கு. 7 வருஷத்துக்கு ஒரு முறை 50 - 60 டன் பெயின்ட் அடிக்கிறாங்களாம். கலக்குற சந்துரு

-மு.சா.கெளதமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close