Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேருந்தில் சென்று அசத்திய சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரின் பிரதம மந்திரி லீ ஹசின் லூங் திங்கள் இரவு டெல்லி வந்தார். நம்மூர் லோக்கல் வி.ஐ.பிகளே பல கார்களுடன் வலம் வருகையில் சிங்கப்பூர் பிரதம மந்திரி சாதாரணமாக குளிர் சாதன வசதி கொண்ட பேருந்தில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கும் ஹோட்டலுக்கு சென்று அனைவரையும் அசரடித்தார்.

தன் மனைவி ஹூ ஷிங் மற்றும் சிங்கப்பூர் மந்திரிகள், மூத்த அதிகாரிகள் புடைசூழ வந்த சிங்கப்பூர் பிரதமர் லூங்ஐ மத்திய அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார். இதற்கு முன் பிரதமர் லூங் 2012 டிசம்பரில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் போர் நினைவு நாள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளார்.

இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மதிய விருந்தில் கலந்து கொள்ளும் லூங் பின்பு இருநாட்டு விஷயங்களைப் பற்றி மோடியுடன்  கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து இரு தலைவர்களும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இதில் பல தொழில் வளர்ச்சி ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் அமையப்போகும் வடகிழக்கு திறன் மையமும் அடக்கம்.

சிங்கப்பூர் பிரதமர் லூங் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் சந்திக்க உள்ளார்.பின்னர் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் புலம்பெயர் மக்கள் அளிக்கவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
சிங்கப்பூர் பிரதமரின் இந்த சுற்றுலா நிகழ்வில் அக்டோபர் 5 மற்றும் 6-ம் தேதி அவர் ராஜஸ்தான் செல்கிறார். அங்கு ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜியுடன் மதிய உணவு விருந்தில் கலந்துகொள்ள உள்ளார்.

ராஜஸ்தான் சிங்கப்பூர் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் சுற்றுலாத் துறை சம்பந்தமான ஒப்பந்தத்தின் நிமித்தமே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- க.விக்னேஸ்வரன்

(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close