Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க தேர்தலுக்கு மிரட்டல் விடுக்கிறார் விக்கிலீக்ஸ் அசாஞ்சே!

2006-ம் ஆண்டு சுன்ஷைன் ப்ரெஸ் என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது "விக்கிலீக்ஸ்". உலக அரங்கில் சர்ச்சைக்குரிய ஆவணங்களை, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடும் இணையதளமாக செயல்பட்டு வருகிறது விக்கிலீக்ஸ். ஆஸ்திரேலிய ஆர்வலர் ஜூலியன் அசாஞ்சால் தொடங்கபட்ட இந்நிறுவனம் இராக் போர், அஃப்கானிஸ்தான் போர் போன்ற பல முக்கிய  நிகழ்வுகள் குறித்த பல ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இப்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய பத்து லட்சம் ஆவணங்களை வெளியிடயுள்ளதாக ஜூலியன் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று நாட்டு அரசுகளை பற்றியும் ஆவணங்களை வெளியிடப் போவதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த வெளியீடு ஹிலரி கிளின்டனை பாதிக்கும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.


இந்த வாரம் முதற்கட்ட ஆவணங்களும், இந்த ஆண்டு முடிவிற்குள் பிற ஆவணங்களும் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸின் பத்தாம் ஆண்டு நிறைவு நாளான நேற்று ஜூலியன் கூறியுள்ளார். லண்டினில் உள்ள இக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் கொண்டுள்ள ஜூலியன், அனைத்து ஆவணங்களும் அமெரிக்க தேர்தலுக்கு நெருக்கமான தொடர்புடையன என்பதால் நவம்பர் எட்டாம் தேதிக்கு முன்னரே அவை வெளியிடப்படும் என்றார்.

ஜூலை மாதம் நடைபெற்ற ஜனநாயக அரசியல் மாநாட்டுக்கு முன்னால், ஹிலரி விகிலீக்ஸின் செயல்பாட்டை தவறாக சித்தரித்தது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ஜூலியன். அப்போது விகிலீக்ஸை பயன்படுத்துவதால் தீங்கிழைக்கும் மென்பொருளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார் ஹிலரி.

இணையதள காணொளி மூலம் பேசிய அவர், "நாங்கள் வெளியிடப் போகும் ஆவணங்கள், நிறைய கோணங்களில் மிக முக்கியமானவை. மூன்று அரசாங்கங்கள் மற்றும் அமெரிக்க தேர்தலை புரட்டிப்போடும் அளவுக்கு முக்கியமானவை. ஆனால் எனக்கு ஹிலரியை பிடிக்காது என்றும், ஹிலரியை அழிக்க நான் போட்ட திட்டம் இது என்றும் கூறுவது வதந்தி. நாங்கள் வெளியிட்டிருக்கும் ஆவணங்கள் போர், ஆயுதங்கள், எண்ணெய், கண்காணிப்பு, கூகுள் மற்றும் அமெரிக்க தேர்தல் தொடர்பானவை" என்றார்.

விகிலீக்ஸ் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வர இருக்கின்றது. உறுப்பினர்களை சேர்க்கவுள்ளது. தற்போது தங்களுடன் வேலை செய்து கொண்டிருக்கும் 100 ஊடகங்களை தாண்டி விரிவுபடுத்தப் போகிறது. விகிலீக்ஸின் செயல்பாடு தொடரும் என்பது அவர் பேச்சிலிருந்து தெரிகிறது. ஆதரவாளர்களிடம் நிதிவுதவி கேட்கிறது விகிலீக்ஸ். மேலும், நிறைய புது புத்தகங்களை வெளியிடவுள்ளது.
இங்கிலாந்து ஐரோப்ப நாடுகள் ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், அவர் ஐரோப்ப நீதிமன்றத்தில் வழக்காடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நான்கு வருடமாக தூதரகத்தில் இருந்து சூரிய ஒளியையே கண்டதில்லை என்றும், இதனால் அவரை மருத்துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வேடிக்கையாக கூறினார் ஜூலியன். பாலியல் பலாத்காரம் வழக்கிற்காக ஸ்வீடனில் ஜூலியன் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அக்குற்றங்களை அவர் மறுத்துள்ளார்.

- ம. சக்கர ராஜன்,
மாணவர் பத்திரிகையாளர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close