Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று நியமிக்கப்படுகிறார் ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளர்

ஐ.நா சபையின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகீசிய நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரெஸை தேர்வு செய்ய அக்டோபர் 5-ம் தேதி பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவர் இன்று அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட உள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்து வரும் பான் கி மூனின் பதவி காலம் முடிவடைய உள்ளது. எனவே, ஐ.நா சபையின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதில் தேர்வான அன்டோனியோ, போர்ச்சுகல் பிரதமராக 1995-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையில் பதவி வகித்துள்ளார். மேலும், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையராக 2005-ம் ஆண்டு முதல் 2015 வரை பதவி வகித்தவர்.

கட்டரெஸ், ஐ.நா. சபையின் 9-வது பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி  வரை பதவி வகிப்பார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ