Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோபல் பரிசு பெற்ற இத்தாலிய நாடக ஆசிரியர் மரணம்

இத்தாலியைப் பிறப்பிடமாகக் கொண்ட டேரியோ போ, 90, நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர்,  நாடக இயக்குனர் என்ற பன்முகம் கொண்ட டேரியோ போ, கடந்த 1997 ஆம் ஆண்டு அவரின் நாடகத்திற்காக நோபல் பரிசு பெற்றார். 


அவரின் நாடகங்கள் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவரது நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. தற்கால அரசியல் சூழ்நிலைகளை நையாண்டி செய்யும் வகையிலும், ஆதிக்க மற்றும் அதிகார மையங்களுக்கு எதிராகவும் அவரது நாடகங்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ