Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் வாடிக்கையாளர்களுக்கு மார்க் போட்ட ஆப்பிள் ஊழியர்கள் நீக்கம்

ஆப்பிள் ஸ்டோரில், பெண் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ரகசியமாக பகிர்ந்து, அவர்கள் புகைப்படத்துக்கு மார்க் போட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்று ’Courier-Mail’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அவர்களை வேறு காரணத்துக்காக நீக்கினோம் என்று மறுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், மொபைல் வாங்க வரும் பெண் வாடிக்கையாளர்களை அவர்களின் அனுமதியில்லாமல் ரகசியமாக படம்பிடித்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து தவறாக கமெண்ட் செய்து வந்துள்ளனர். பிடிப்பட்ட ஊழியர்கள் மொபைலில் நூற்றுக்கணக்கான பெண் வாடிக்கையாளர்களின்  க்ளோசப் புகைப்படங்கள் இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆப்பிள் ஸ்டோர்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்து வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ