Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்பை முந்தும் ஹிலரி க்ளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி க்ளிண்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே முன்னர் கடும் போட்டி நிலவி வந்தது.  ஆனால் சமீபத்திய கருத்து கணிப்புகள் எல்லாமே ஹிலரிக்கு தான் சாதகமாக வருகின்றன. அங்குள்ள ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில் க்ளிண்டனுக்கு ஆதரவாக 45 சதவீதம் பேரும், ட்ரம்புக்கு ஆதரவாக 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 7 சதவீதம் அதிக ஆதரவுடன் ஹிலரி முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவித்துள்ள அந்த கருத்துக்கணிப்பில்,  முக்கியமாக பெண்கள் குறித்து ட்ரம்ப் பேசிய வீடியோவுக்கு பின்னர், அவரது மதிப்பு அங்கு கடுமையாக சரிந்துள்ளது என்று தெரிய வந்ததுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close