Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு குழந்தைக்கு உணவில்லையென்றால்…?


“தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்துவிடு” என்றான் முண்டாசுக்கவி. ஆனால் இந்த ஜகத்தின் நிலை? உணவிற்காகக் கையேந்துபவனை ஏளனமாய்ப் பார்க்கிறோம். உதாசீனப் படுத்துகிறோம். அட வாழ்க்கையை வாழ்ந்து முடித்த வயோதிகர்களுக்கு உணவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, இதழ்கள் விரிய மொட்டுகள்போன்ற பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கூட சத்தான உணவுகள் இப்பூமிப்பந்தில் கிடைப்பதில்லை. வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள ஆறில் ஐந்து குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகின்றன என்னும் தகவல் KFC யிலும் மெக்டொனால்டிலும் ஆயிரங்கள் செலவழிக்கும் நம் இதயத்தில் ஆணியை அடிக்கத்தான் செய்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையைச் சார்ந்த குழந்தைகள் அமைப்பான UNICEF உலகின் பல நாடுகளிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. வரும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அவ்வமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் ஆறு குழந்தைக்கு 5 குழந்தை வீதம், ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. 6 முதல் 23 மாதங்களான குழந்தைகளுக்கு சரியான உணவு அளிக்கப்படுவதில்லை என்று  அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அந்த வரம்பிலுள்ள குழந்தைகளுக்கு திட உணவுகள் மிகவும் குறைவாகவே தரப்படுவதால் ஊட்டச்சத்து குறைவாகவே உள்ளதாம்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் ஊட்டச்சத்து என்பது சராசரி மனிதனை விட அதிகமாகத் தேவைப்படும். மூளை, எலும்பு உள்ளிட்டவை சரியாக வளரும் பருவம் என்பதால் ஊட்டச்சத்துகளின் தேவை மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான குழந்தைகள் இப்படி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது.

குழந்தைகளுக்கு சரியான சத்தான உணவுகளை அளிக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் மரணங்களைத் தடுக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்தான உணவுகளின்றி தவிக்க, மீதமுள்ள ஒரு பங்கு குழந்தைகளுக்குக் கொழுப்பும், சர்க்கரையும் நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. செனீகல், நேபாளம், தான்சானியா போன்ற நாடுகளில் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளுக்கு கொழுப்புச்சத்தும், சர்க்கரையும் நிறைந்த திண்பண்டங்கள் அதிகமாகத் தருப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

உணவுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாமலும், குழந்தைகளுக்கு என்னென்ன தேவை என்பது தெரியாமலும் பெற்றோர்கள் கண்ட உணவுகளையும் குழந்தைகளுக்குக் கொடுப்பதும், அவர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடாக அமைந்துவிடுகிறது. சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அடங்கிய தின்பண்டங்களில் புரதச்சத்துக்கள் மிகக்குறைவான அளவே உள்ளன. இதுபோன்ற பொருட்கள் நகரங்களில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது மிகவும் வருத்தமானதாகும்.

UNICEF அமைப்பின் மூத்த ஊட்டச்சத்து நிபுனர் பிரான்சிஸ் பிஜின் கூறுகையில், “2016ம் ஆண்டும் இதுபோன்ற ஊட்டச்சத்துப் பிரச்சனைகள் இருப்பது வருந்தத்தக்கது. குழந்தைகளுக்குத் தரவேண்டிய தரமான உணவுகளுக்கப் பதிலாக, கொழுப்புச் சத்து நிறைந்த தின்பண்டங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்கு நாம் வாய்ப்பளிப்பதேயில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்.

‘காலம் மாறுகிறது..உணவும் விவசாயமும் மாற வேண்டும்’ என்ற தலைப்பில் தான் இவ்வாண்டின் உணவு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த மாற்றம் நிச்சயம் வரவேண்டும். வெறும் ஃபேஸ்புக்கில் புகைப்படமும், டுவிட்டரில் ஹேஷ் டேகாகவும் மட்டும் உணவு தினத்தை நாம் கடக்கக்கூடாது. குறைந்தது ஒரு குழந்தைக்காவது நல்ல ஆரோக்கியமான உணவை நாம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் நம் அடுத்த வேலை உணவு நிச்சயம் அமிர்தமாய் மாறும்…வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்கெல்லாம்!

- பிரதீப் கிருஷ்ணா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ