Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கல்யாணமே பண்ணிக்காதீங்க!” - சொல்கிறார் ஏஞ்சலினா ஜோலியின் வழக்கறிஞர்

ஹாலிவுட்டின் ’டிசோ’ குயின் என்கிறார்கள் லாரா வாசரை. டிசோ என்றால் டிசொல்யூஷன் ஆஃப் மேரேஜ் (Desolution). அதாவது திருமண முறிவு.

ஹாலிவுட் பிரபலங்களான பிரிட்னி ஸ்பியர்ஸ், கிம் கர்டாஷியன், ஜானி டெப், அஷ்டான் உள்ளிட்ட பலருக்கும் விவாகரத்து வாங்கிக் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு.  இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் ஏஞ்சலினா ஜோலி & பிராட் பிட்.

லாராவின் பெற்றோர் இருவருமே பிரபல வழக்கறிஞர்கள். லாராவின் அப்பா  டென்னிஸ்.எம். வாசரும் விவாகரத்துக்குப் பெயர் போன வழக்கறிஞர். டாம் க்ரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றோருக்கு டைவர்ஸ் வாங்கித் தந்த பெருமை அவரையே சாரும்.லாராவுக்கும் திருமண உறவு ஒர்க் அவுட் ஆகாமல் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளுடன் தனியே வசிக்கிற லாராவுக்கு இன்னொரு திருமணத்தில் நம்பிக்கை இல்லையாம்.

 It Doesn’t Have To Be That Way: How to Divorce Without Destroying Your Family or Bankrupting Yourself என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் லாரா. 

விவாகரத்து வழக்குகளுக்கு மட்டுமே பெயர் போன வக்கீல் லாராவின் ஒரு மணி நேர ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 56 ஆயிரம். தம்பதியருக்கிடையே பிரச்னைகள் பெரிதாகாமலும் மீடியாவில் பரபரப்பைக் கிளப்பாமலும் அமைதியான முறையில் விவாகரத்தை முடித்துக் கொடுப்பதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி!

வருடக் கணக்கில் விவாகரத்து வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவருக்கு திருமண பந்தத்தின் மேல் எந்த சென்டிமென்ட்டும் கிடையாதாம். 

''என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல என் கிளையண்ட்டுகளோட கேரக்டரையே புரிஞ்சுக்க முடியறதில்லை. இவங்க எத்தனை நாளைக்கு சேர்ந்து வாழப் போறாங்கனு நினைக்க வைக்கிற எத்தனையோ ஜோடிகள் வருஷக் கணக்குல சேர்ந்திருக்கிறதையும் பார்த்திருக்கேன். மேட் ஃபார் ஈச் அதர்னு பாராட்டப்பட்ட ஜோடிகள் ஒரு வருஷத்துக்குள்ளயே பிரிஞ்சு போறதையும் பார்த்திருக்கேன்...'' என்கிறார் லாரா.

''டைவர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டுங்கிறதால, திருமண உறவைத் தக்க வச்சுக்க என்னதான் வழினு என்கிட்ட நிறைய பேர் கேட்கறாங்க.  எனக்கு பிரிவைப் பத்தி மட்டும்தான் தெரியும். உறவைத் தக்க வச்சுக்கற வழி தெரிஞ்சிருந்தா என் விஷயத்துலயே அது நடந்திருக்குமே...'' விரக்தியாகப் பேசுகிற லாராவின் பெஸ்ட் அட்வைஸ் என்ன தெரியுமா? கல்யாணமே பண்ணிக்காதீங்க!

- ஆர்.வைதேகி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ