Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புவி வெப்பமடைதலைத் தடுக்க புதிய ஒப்பந்தம்

புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து பின்னர் முற்றிலுமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை வெற்றி பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ருவண்டா நாட்டின் தலைநகர் கிகாலியில் புவி வெப்பமடைதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

அப்போது, ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஹைட்ரோஃபுளூரோகார்பன், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகியவை செயல்படத் தேவையான ஒரு முக்கியமான காரணியாக இருந்து வருகிறது.

கார்பன்-டை-ஆக்சைடை போன்று ஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் ஆயிரம் மடங்கு நச்சுத் தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுகின்றது. ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைக்கு இது மிக முக்கியமான காரணியாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேச்சுவார்த்தையின் மூலம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், வளர்ந்த பணக்கார நாடுகளில் ஹைட்ரோஃபுளூரோகார்பனின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 3 ஆண்டுகளில் முற்றிலுமாக நிறுத்த வழிவகை செய்கின்றது.

மற்ற நாடுகளில், இந்த ஹைட்ரோஃபுளூரோகார்பன்களின் பயன்பாட்டைக் குறைக்கும் பணிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னரே தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ