Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக்கிற்கு குரல் கொடுப்பாரா,அயர்ன் மேன்?


குரல் கொடுப்பாரா?னு தலைப்பை பார்த்ததும் ஃபேஸ்புக்கிற்கு என்ன பிரச்சனை?அயர்ன் மேனுக்கு என்ன சம்பந்தம்னு? டென்சனாவாதீங்க..,

பாஸ்...கூல்! மேல படிங்க!

பேஸ்புக்கின் குரல் தேடல்....!

இந்த ஆண்டு(2016) தொடக்கத்திலேயே ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அயர்ன் மேன் படத்தில் வரும் ஜாவிஸ்(jarvis) போன்று கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகளையும் கட்டுபடுத்தும் ஒரு செயற்கை அறிவூட்டப்பட்ட பெர்சனல் அசிஸ்டென்டை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக அறிவித்தார்.

அந்த பர்சனல் அசிஸ்டன்ட்டுக்கான குரல் தேடல் தான் இப்போது பரபரவென நடக்கிறது. மார்க் தன் பேஸ்புக் பக்கத்தில்,"என் ஜாவிஸ்'க்கு குரல் கொடுக்கும் நேரம் வந்தாச்சு.யாரிடம் கேட்கலாம்?"என பதிவிட்டது தான்  தாமதம். கமென்ட் பாக்ஸ் நிரம்பி வழிகிறது, வந்து குவியும் சிபாரிசு பெயர் பட்டியலால்!

பட்டியலில் அமிதாப் பெயர்....?

வந்து குவிந்த வண்ணம் உள்ள பெயர் பட்டியலில் டாப்பில் உள்ளவர்கள்,

பால் பெட்டனி - அயர்ன் மேன் படத்தில் நிஜ ஜாவிஸுக்கு குரல் கொடுத்தவர்.

ராப்ரட் டௌனி ஜூனியர் - அயர்ன் மேன் சீரிசில் அயர்ன்மேனாகவே வாழ்ந்தவர்.

பெனடிக் கம்பர்பேட்ச் - உலகப்புகழ் ஷெர்லாக் சீரிசின் நாயகன்.

வைல்ஸ் - கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிசில் 'ஹோடொர்' பாத்திரத்தில் நடித்தவர்.

இந்த வரிசையில் ஒரே இந்திய பிரபலம் தன் கம்பீர குரலுக்கு பேர் போன நம்ம அமிதாப் பச்சன்!

அயர்ன் மேன்....?

மார்க்கின் இந்த பதிவிற்கு பதிலாக ராபர்ட் டௌனி ஜூனியர் போட்ட கமென்ட் தான்,"பெட்டனிக்கு சன்மானம் தரப்பட்டால் நான் குரல் கொடுக்கிறேன்"என்பது.

டௌனியின் இந்த கமெண்ட் தான் பேஸ்புக் பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.உலகப் புகழ்பெற்ற நடிகரான டௌனி தானே குரல் கொடுக்க முன்வந்துள்ளதால் மார்க் அவரை மிஸ் பண்ண மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.

#நான் நம்ம டி.ஆர்-அ தான் பாஸ் சஜஸ்ட் பண்றேன்.நீங்க????

- ரா.கலைச்செல்வன்
(மாணவப் பத்திரிகையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்