Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'லியனார்டோ டிகாப்ரியோ, ஐ.நா பதவியில் இருந்து விலக வேண்டும்'

ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ ஐ.நா-வின் காலநிலை மற்றும் அமைதிக்கான தூதராகவும் இருந்து வருகிறார். தற்போது அவர் வகித்து வரும் ஐ.நா பதவியிலிருந்து அவர் உடனே விலக வேண்டுமென்று சுவிட்சர்லாந்தைச்  சேர்ந்த  புரோனோ  மான்சர் ஃபன்ட் எனும் தன்னார்வல அமைப்பு கோரியுள்ளது. மலேசியாவில் பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்ததாக கூறப்படும் 1 எம்.டி.பி வழக்கில் சம்பந்தப்பட்டோருடன் காப்ரியோ தொடர்பு கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது அந்த தன்னார்வல அமைப்பு.


முதன் முதலாக காப்ரியோவுக்கும் மலேசிய மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 'தி ஹாலிவுட் ரிப்போர்டரில்' செய்தி வெளியாகியது. அது முதலே, இந்த விஷயம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது, ஒரு பிரபலமான தொண்டு நிறுவனமும் இந்த பிரச்னையை கிளப்பியுள்ளது. இது விஷயத்தில் தொடர்ச்சியாக மவுனம் காத்து வருகிறார்  காப்ரியோ. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ