Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைபடை தாக்குதல்: 35 பேர் பலி

கர்பலா போரில் முகமது நபியின் பேரன் இமாம் ஹுசேன் கொல்லப்பட்ட துக்கநாளான ஆஷூரா தினத்தை முன்னிட்டு இன்று பாக்தாத் நகரில் உள்ள ஷியா பிரிவு மக்கள், அங்கு ஒன்று கூடியிருந்தனர். அப்போது அங்கு ஒரு கூடாரம் அமைத்து அவர்கள் துக்கநாள் தொடர்பான சடங்குகளில் ஈடுபட்டபோது, கூட்டத்துக்குள் இருந்த பயங்கரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது.


இந்த தாக்குதலில் 35 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ