Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன விஞ்ஞானிகள் விண்வெளி ஆய்வு பயணம்

சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தை நாளை காலை விண்ணில் செலுத்துகிறது. 


’ஷெங்ஸோ 11’ விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும்  இரண்டு விஞ்ஞானிகளும் சுமார் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 


விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள சீனா, கடந்த 2013-ம் ஆண்டு  மூன்று சீன விஞ்ஞானிகளுடன்  ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக அவர்கள்  பூமிக்கு திரும்பினர்.


தற்போது, ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தில் இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ