Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறை கைதிகளிடையே மோதல் -  பிரேசிலில் 25 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் வடபகுதியில் உள்ள போவா விஸ்தா சிறைச்சாலையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலில், சிலர் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், பிறர் உயிரோடு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலவரம் தொடங்கியதும், சிறப்பு காவல்துறையினர் சிறைக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், இந்த கலவரத்தின்போது சிறைக்குள் கைதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close