Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியான்மரில் படகோட்டியின் பேராசையால் 25 பேர் பலி

மியான்மரின் சின்ட்வின் ஆற்றில் சென்ற  படகு கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர். 


மியான்மர் நாட்டில் போதுமான சாலை வசதிகள் இல்லாததால், அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.  சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால், அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை படகோட்டிகள் ஏற்றிச் செல்கின்றனர். 


இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சின்ட்வின் ஆற்றின் வழியாக சுமார் 250 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, அதிகாலை  5 மணியளவில், மியான்மர் நாட்டின் கானி என்ற இடத்தின் அருகே நீரில் கவிழ்ந்தது. 100 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில் 250 பேரை ஏற்றிச் சென்றதால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கூடும் என மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ