Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’குறிப்பிட்ட நாட்டையோ மதத்தையோ தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது’ : சீனா

பாகிஸ்தானை ’தீவிரவாதத்தின் அடித்தளம்’ என பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டதை சீனா எதிர்த்துள்ளது. 


மோடி பாகிஸ்தானை ’தீவிரவாதத்தின் அடித்தளம்’ என கூறியதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்,” சீனாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தீவிரவாதத்துடன் எந்த குறிப்பிட்ட நாட்டையோ, மதத்தையோ தொடர்புப்படுத்தக் கூடாது. 


தீவிரவாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், பல தியாகங்களைச் செய்துள்ளது. இதை சர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ள வேண்டும்.


இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள் தான். இரு நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்” என தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ