Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏமனில் 72 மணிநேர போர் நிறுத்தம்

ஏமனில் 72 மணி நேர போர் நிறுத்தம் வியாழக்கிழமையில் இருந்து செயல்படுத்தப்படும் என ஐநா அறிவித்துள்ளது. ஐநா-வின் போர் நிறுத்த  உடன்பாட்டிற்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  


ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு, ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதே நேரத்தில், ஏமன் அதிபருக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி கூட்டுப்படைகள் 2015 முதல் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டுவிட்டனர்.


தொடர் தாக்குதல்களால் அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டு வருவதால்,  போர்நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டு வருகிறது. முன்னதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐ.நா. சபையில் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி, ஐநா தூதர் உள்ளிட்டோர்  நடத்திய கூட்டத்தில் உடனடியாக போர்நிறுத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வருகின்ற அக்டோபர் 19 முதல் 72 மணி நேர போர்நிறுத்தம் செயல்படுத்தப்படும் என ஏமனின் ஐ.நா. சிறப்பு தூதர் அறிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்