Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெரு அரசின் கவனக்குறைவால் 10,000 அரியவகை தவளைகள் பலி

பெரு நாட்டின் தென் பகுதியில் உள்ள தித்திகாக்கா ஏரியில்,  10,000-க்கும் மேற்பட்ட ’scrotum frog’  ரக இறந்த தவளைகளின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பது சர்வதேச சுற்றுச் சூழல் ஆர்வலர்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.  


 மாசடைந்த நதியை சுத்திகரிக்க, அந்நாட்டு அரசு தவறியதே இந்த பேரிழப்புக்கு காரணம் என ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுவது குறித்து, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தும்  அந்நாட்டு அரசு கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது.


தித்திகாக்கா நீர்த்தவளைகள், அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இவ்வகை தவளைகள் தென் அமெரிக்காவின் பெரிய ஏரியான தித்திகாக்காவில் மட்டுமே காணப்படும் அரிய வகை உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ