Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மினி ஸ்கர்டுக்கு கசைஅடி வாங்கிய ஈரான் பெண், இன்று முன்னணி ஃபேஷன் டிசைனர்!

தலா ராஷி (Tala Raassi), இஸ்லாமிய மதச் சட்டங்கள் இன்றளவும் வலுவாக இருக்கும் ஈரான் நாட்டுப் பெண். 16 வயது ராஷி, தன் வீட்டில் தன் உறவினரின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்குள்ளேயே மினிஸ்கர்ட் அணிந்து பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தாள். திடீரென ஆயுதம் ஏந்திய வீரர்கள் வீட்டுக்குள் புகுந்து அவளை  இழுத்துச் சென்றனர். "என் மகள் என்ன குற்றம் செய்தாள் " என்று அவளின் தந்தை பதறி அடித்து விசாரித்த போது வீரர்களிடமிருந்து வந்த வார்த்தை "மினிஸ்கர்ட்".

ராஷியின் தந்தை எவ்வளவோ கெஞ்சி, கூத்தாடி, மன்னிப்பு கோரியும் மகளை விட மறுத்துவிட்டனர்.  5 நாட்கள் சிறை 40 கசை அடி என்று தண்டனை வழங்கினார்கள். வீட்டுக்குள் கூட பெண்கள், தங்கள் உடலை புர்கா மற்றும் ஹிஜாப் கொண்டு முழுமையாக மறைக்க வேண்டும் என்று ஈரான் அரசு சொல்லாமல் சொல்லியதை ராஷிக்கு உணர்த்தியது. 

ராஷிக்கு அப்போது தான் மனத்தில் கேள்விகள் எழுகின்றன. "நான் என் சொந்த வீட்டில் கூட எப்படி உடை அணிய வேண்டும் என்று நான் தீர்மானிக்க முடியாதா...? அரசின் சட்ட திட்டங்கள் என் வீட்டின் படுக்கை அறை வரை பாயுமா...? தனி மனித சுதந்திரம் என்றால் என்ன..? " என்று கேள்விகள் தொடர்கின்றன. 

அன்று அந்த 16 வயது பெண்ணுக்கு விடை தெரியவில்லை, நியூட்டனின் 3-ம் விதி படி ஒவ்வொரு வினைக்கும், சரி சமமான எதிர்வினை உண்டு தானே. அப்படி ஒரு வினையைத் தான் முதலில் ராஷிக்கு ஈரான்  அரசு அதிகாரிகள் கசை அடி மூலம் வினையாற்றினர். அதிகாரிகள் அடித்த கசை அடி ராஷியின் உடல் மீது விழுவில்லை, அவள் மனதில் விழுந்தது. அன்று அவர்கள் அடித்த ஒவ்வொரு கசை அடியும், அவளின் தேடலை அதிகரித்தது. எது சுதந்திரம் என்கிற கேள்விக் கணைகளை அவள் மனதில் தைத்தது. அவளும் விடை தேடிய படியே சில வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பயணப்பட்டாள்.

கிடைத்தது விடை. ''சுதந்திரம் என்பது நான் விரும்பும் உடை" என்று உரக்கச் சொல்லத் தொடங்கினாள். ''ஆம், என்னை நான் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க வேண்டும். என் நம்பிக்கை என்கிற அழகை என் உடைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்" என்று தனக்கான ஆடைகளை தானே வடிவமைக்கத் தொடங்கி, இன்று அமெரிக்காவின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். குறிப்பாக இவர் பிகினி மற்றும் ஸ்விம் சூட் வகை ஆடைகளை வடிவமைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்.

தற்போது 35 வயதாகி ஃபேஷன் லைன் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் ராஷியை பார்க்கும் போதெல்லாம், அன்று கசை அடி வாங்கிய 16 வயது பெண்ணை  நினைவுப்படுத்துகிறார். 

ராஷி அதோடு நின்றுவிடவில்லை. Fashion is Freedom என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக்கின் "உலகின் பயமற்ற பெண்மணி - 2012 " பட்டத்தை  மிகப் பெரிய ஆளுமைகளான ஒபேரா வின்ஃப்ரே & ஹிலாரி கிளிண்டன் உடன் பகிர்ந்து கொண்டார். அன்று ஈரான் அதிகாரிகள் ஆற்றிய வினைகளுக்கு, தன்னை அறியாமலேயே மிகச் சரியான எதிர்வினையை ஆற்றி உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷி.

இதுவரை படித்துவிட்டு இவர் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கு எதிரானவர் என்று முடிவுக்கு வந்துவிட வேண்டாம். "நான் இஸ்லாமிய பாரம்பரியத்தை பெருமையாக பார்க்கிறேன். இஸ்லாத்தை மதித்து புர்கா மற்றும் ஹிஜாப் அணிபவர்களை நான் மதிக்கிறேன். அதே போல் பல உலக நாடுகளில் இஸ்லாமிய பெண்கள், எந்த உடை அணிய விரும்புகிறார்களோ அந்த உடையை அணிகிறார்கள். (இதில் இந்தியாவும் அடக்கம் என்பதில் மகிழ்ச்சி). நான் அந்த சுதந்திரத்தை தான் கேட்கிறேன்" என்று அமைதியாக தன் கருத்துக்களோடு புன்னகைக்கிறார் ராஷி. 

-மு.சா.கெளதமன்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ