Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை வெள்ள ஸ்டிக்கரும் அமுல் கார்ட்டூனும்! அமுலின் அரை நூற்றாண்டு போஸ்டர் பயணம்

 

முல் பேபி ஸ்கிரீனில் அறிமுகமாகி இதோடு 50 வருஷம் ஆகுது… ஆம். விளம்பரங்களுக்கான புது யுக்தியை முதன்முதலில் கொண்டு வந்தது இந்த அழகு குட்டி அமுல் பேபி தான்…. தங்கள் விளம்பரத்துக்காக பிரபலமானவர்களை அழைப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால், அமுல் விளம்பரத்தை பொறுத்தவரையில் அவர்களின் ப்ராண்ட் அம்பாசிடர் எப்பவுமே இந்த அமுல் பேபிதான். அதுவரை குறும்புத்தனத்தை அத்துணை அழகாக யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள். சிறு குழந்தையின் கண்ணங்கள் எப்படி சிவந்து க்யூட்டாக இருக்குமோ அப்படியே அமுல் பேபியை உருவாக்கினார்கள் அமுல் கிரியேட்டர்ஸ்…..

அமுல் நிறுவனத்தின் இந்த விளம்பர யுக்திகளை ஆரம்பித்தது சில்வெஸ்டர் டாசவ்ன்சா….. அவருக்கு பக்கபலமாக இருந்து போஸ்டர் விளம்பரங்களில் வரும் குழந்தையை வரைந்து தந்தது ஃபெர்னாண்டஸ் மற்றும் உஷா கட்ராகண்டா. இவர்களது இந்த விளம்பர புயல் இந்தியாவின் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்வுகளை சிறு குழந்தையின் வரைபடத்தின் மட்டுமே கொண்டு கூறிவிட்டது. இதோ இங்கே அப்படி கூறப்பட்ட சில விளம்பரங்களின் தொகுப்பு…..

ஜாக்பாட் குதிரையில் அமுல் பேபி!!!….

1966-ம் ஆண்டு தான் முதன்முதலில் அமுல் நிறுவனத்துக்கான விளம்பரம் வந்தது. அந்த சீசனில் ஹார்ஸ் ரைடிங்க் ரொம்ப ஃபேமஸ். இன்று நம் விளம்பரங்கள் எப்படி சீசனிற்கு ஏற்ப விளம்பரங்களை மாடல் மாடலாக மாற்றி அமைக்கிறதோ அதை 50 வருடங்களுக்கு முன்னர் அமுல் நிறுவனம் ஆரம்பித்தது. குதிரைப் பந்தயம்தான் அப்போதைக்கு டாக் ஆஃப் தி சிட்டி. தங்களது விளம்பரத்தில் அந்த அமுல் சுட்டிப்பெண் குதிரை மேல் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு, ஒரு கையில் ஜாக்கியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் அமுல் பிரட்டைக் கொண்டு அமர்ந்திருப்பாள்.

காலை எழுந்தவுடன் ப்ரே பண்ண கத்துகொடுத்த குழந்தை….

யுஸ்கேட் ஃபெர்னாண்டஸ் அமுல் பேபியின் மூலம் முதன்முதலில் பெட்-டைம் பிரேயர்ஸ்ஸை நம் குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார். காலை எழுந்தவுடன் பெட்டில் அமர்ந்தபடி “எல்லா நாளையும் போல இன்றைய பொழுதும் எனக்கு என்னுடைய ரொட்டி கிடைக்கவேண்டும்…. அமுல் பட்டரோடு” என்ற வசனத்தோடு அமர்ந்திருக்கும் போஸ்டர் அது.

 

1976 – தி எமர்ஜென்சி

INTERNAL SECURITY ACT எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் முதன் முதலில் அமலுக்கு வந்தபோது வந்த விளம்பரம் இது…..  இந்த சட்டத்தினைப் பற்றிய விழிப்பு உணர்வு ரொம்பவே முக்கியமாக கூறப்படவேண்டியது என்பதால் அமுல் நிறுவனம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொடுத்த விளம்பரம் இது.

 

1980 – கருத்தடை எதிர்ப்பு’ இயக்கத்துக்காக….

இந்திரா காந்தியின் ஆட்சியின் போது STERILISATION DRIVE என்ற தீர்ப்பு வந்தது. அதனை அமுல் நிறுவனம் தனது விளம்பரம் மூலம் தன்னுடைய நிறுவனத்தின் கொள்கையை விளம்பரத்திலேயே கூறியது.

 

1992 - என்ரான் நிறுவனத்தின் ஊழல்

யு.எஸ்.ஸின் இயற்கை எரிவாயுவுக்கான திட்டத்தை மகாராஷ்ட்ராவின் தாபோலில் தொடங்கினார். 1991-ம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தத்துக்குப் பிறகு அந்நிய நாடு ஒன்று நம் நாட்டில் மிகப்பெரிய அளவில் மூதலீடு செய்தது அப்பொழுதுதான். ஆனால், அதன் விளைவு நினைத்தபடி சரிவர வரவில்லை. மனித உரிமைகள் மீறப்பட்டு, பொருளாதார வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் அதுவே காரணமாய் ஆனது.

1992 –  பைலட்ஸ் ஸ்ட்ரைக்

அதே ஆண்டு, விமான ஓட்டிகள் ஸ்ட்ரைக் செய்தனர். அந்த நிலையில் வந்த அமுல் விளம்பரம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. பைலட் ஒருவர் விமானத்தின் மீதி ஏறி அமர்ந்து அழகாய் ஒய்யாரமாய் பிரட்டில் அமுல் பட்டர் தடவி சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

 

2000 (DEC)- இதுவா B-WOOD?

2000த்தின்போது பாலிவுட் படங்கள் யாவும் அங்கிருக்கும் பாய்(BHAI)களின் ராஜ்யத்தால் தான் நடக்கிறது என்ற பரபரப்பான குற்றச்சாட்டு நடந்தது. நம் பார்த்த பாட்சா பாய், ராஜு பாய் போல ஏதோ ஒரு பாய் என்ற குற்றச்சாட்டுதான் அது. B-WOOD என்ற சொல்லுக்கு BHAI-LLYWOOD என்று கூறுவது போல அந்த விளம்பரம் அமைந்திருந்தது அந்த படம்.

 

ஜக்மோகன் டால்மியா – பி.சி.சி.ஐ.யும்:

அதன்பின்னர், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியா கிரிக்கெட்டில் செய்த கோல்மால்க்காக பிடிபட்டார். அதனை படங்கள் மூலவும் போஸ்டர்ஸ் மூலவும் காண்பிக்க, ‘தீயவை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயவை கேட்காதே’ என்ற அந்த மூன்று வாசகங்களை மூன்று மனித வரைபடம் மூலம் காண்பித்தனர். அச்சமயத்தில் (அந்த போஸ்டருக்கு பின்னர்), தால்மியா, அமுல் நிறுவனத்தின் மீது 500 கோடி ரூபாய்க்கு கேட்டு தொடர்ந்து மிரட்டியதாக அமுல் நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்திருந்தார்.

 

 

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்?!

விநாயகர் சதுர்த்தி, இந்துக் கடவுள் விநாயகப்பெருமான் நேரே வந்து ஆசி வழங்கும் நாளாக கொண்டாடப்படும் திருநாள். அப்படி அந்த வருடம் வந்த விநாயகர் சதுர்த்திக்கு, அமுல் நிறுவனம், ஒரு போஸ்டர் தயாரித்தது. ஒரு சிறுமி, பிள்ளையாருக்கு பிரசாதம் அளித்து, இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவது போல அப்படம் இருக்கும்.

 

ஏர்வேய்சில் தொலைந்த சச்சின் BAG!!!

ஒருமுறை பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் சச்சினின் லக்கேஜை மாற்றி வைத்து சிக்கலுக்கு உள்ளானது. அப்பொழுது, அமுல் பேபி BRITISH-ERRWAYS  என்று கூறுவது போன்ற விளம்பரம் வந்தது. இவ்விளம்பரம் வந்த பிறகு போஸ்டரை உருவாக்கியவர்கள் ஏர்லைன்ஸ் சார்பில் அழைத்து விசாரிக்கப்பட்டனர் என்பது கூடுதல் தகவல்.

சத்யம் ஊழல்

2009-ம் ஆண்டு சத்யம் என்ற நிறுவனம் செய்த ஊழலை மையப்படுத்தி தனது விளம்பரத்தை உருவாக்கியது. ரூ.7,136 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு அவர் மீது பதிவாகியிருந்த போதும், நிறுவனத்தின் சி.இ.ஓ.வின் தலைவர் ராமலிங்க ராஜுவை குற்றம் சாட்டாத வகையில் அமைந்திருக்கும். இதுகுறித்து அமுல் நிறுவன தலைவர் கூறும்போது, “இந்தச் செய்தி கிடைத்த 20 நிமிடங்களிலேயே எங்கள் க்ரியேட்டிவ் டீம் தென் இந்தியாவை நோக்கி புறப்பட்டனர். மும்பையைச் சேர்ந்த விளம்பரக்காரர்களுக்கு கூட இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் இவை தெரியவந்தது” என்கிறார்.

 

இந்திய அரசியலின் புது-சகாப்தம்

2014 (MAY)- மே மாதம் NDA கூட்டனியும் அமுல் நிறுவனமும் தலைநகர் தில்லியில் பலரின் மனதையும் வென்றது. எப்படி தெரியுமா? ஒரு ஸ்லோகன் மூல்யமாக இது நடந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் பாப்புலர் ஸ்லோகன் – “Achhe din aayenge”…. ‘அதாவது, நல்ல நாட்கள் வரும்’

 

ஆல் இஸ் ஹெல்லா?

2015 (NOV)– ஹிந்தி நடிகர் அமீர்கான், தனது மனைவி இந்தியாவில் வாழ பயப்படுகிறார் என்று கூறி மீடியாக்களில் சூழப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்கமாட்டோம்!!!! அப்போது வந்தது இந்த அடுத்த விளம்பரம்…. அமீர்கானும் அவர் மனைவி கிரன் தங்களது துணிகளை பெட்டியில் பேக் செய்வது போலவும், அருகில் அமுல் லிட்டில் கேர்ள் அவர்களுக்கு ஆறுதலாக அமுல் பட்டரை கொடுப்பது போலவும், இவற்றின் மேலே “ஆல் இஸ் வெல் ஆர் ஆல் இஸ் ஹெல்” என்ற வாசகம் இருக்கும்.

 

இன்டெர்நெட் நடுநிலை

2015 (DEC)- TRAI, இந்தியாவில் இன்டெர்நெட் சேவையில் நடுநிலையை நிலைநாட்ட முனைந்தது. குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு மாதிரியும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியாகவும் செயல்படக் கூடாது என்றும் முடிவெடுத்தது. அதனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் இப்படம்.

 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஸ்பெஷல்

2016 (SEP)- சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்…. உரி தாக்குதல் குறித்தும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றியும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்த ஸ்ட்ரைக் பற்றிய தகவல்கள் நம்மை வந்தடைந்தவுடன் வெளியானது அடுத்த விளம்பரம். இதோ அது இங்கே…

பாபியின் நோபல்காக…

2016 (OCT) - அமெரிக்கன் ஃபேமஸ் பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர் பாபி டேலானுக்கு சமீபத்தில் 2016-க்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இசைத் துறையில் 10 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டதற்காக தரப்பட்டது. இவரது முந்திய ஃபேமஸ் பாடல்களான “BLOWIN’ IN THE WIND” “THE TIMES THEY ARE A-CHANGN”  முதலியவை இன்றளவும் அமெரிக்காவின் சிவில் ரைட்ஸ் மற்றும் போர் எதிர்ப்பு இயக்கங்களுக்கு கீதமாக(ANTHEM) இருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சரி, கடந்த சென்னை, கடலூர் வெள்ள பாதிப்புகள் நினைவு இருக்கிறதா.அதை மறந்தாலும், அப்போது நடந்த ஸ்டிக்கர் அட்ராசிட்டிகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அமுல் அதற்கு அடித்த லூட்டியை பாருங்கள் !

 

 

 

- ஜெ. நிவேதா,

(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close