Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியா,ரஷ்யா வான்வழி தாக்குதல்: அலெப்போவில் 500 பேர் உயிரிழப்பு

அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. அலெப்போவை கைப்பற்ற ரஷ்யாவும், சிரியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. வான்வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில் அலெப்போ நகரம் பயங்கர சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இதனால் 500 பேர் வரை இறந்திருக்ககூடும் என்றும் 2,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் கால்வாசி பேர் குழந்தைகள்.

கடந்த ஜூலை 7-ம் தேதிக்கு பிறகு ஐ.நா பிரதிநிதிகள் யாரும் அலெப்போவுக்குள் நுழையவில்லை. அலெப்போவில் இந்த மாத இறுதிக்குள் உணவுகள் முடிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் அமைதியைப் ஏற்படுத்த பொதுசபை கூட்டுவதற்கு, கனடா அழைப்பு விடுத்திருந்தது. இதில் கொண்டுவரப்பட்ட இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேறவில்லை.

முக்கியமாக இவர்கள் அலெப்போவில் உள்ள மருத்துவமனைகள், பொதுமக்கள் வீடுகள் மீது அதிகம் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க பிரதிநிதி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீஃபன் டான் பொதுசபையின் அவசர கூட்டத்துக்காக 193 ஐ.நா. உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அலெப்போவின் கிழக்கு பகுதியில் மேலும் 2 லட்சத்து 5 ஆயிரம் பொது மக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close