Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேமரூனில் ரயில் தடம் புரண்டு விபத்து: 55 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயணிகள் ரயில் எசெகா நகர் அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் 55 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் ஏராளமான ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெகுதூரம் விலகிச்சென்று விழுந்து கிடந்தன. விபத்தில் காயம் அடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ