Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பான் பஹார்' விளம்பர சர்ச்சை - பாண்டுக்கு பதிலடி

பான் பஹார் என்கிற நிறுவனம், தன் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருளுக்கான விளம்பரத்தில் நடிக்க, முன்னால் ஜேம்ஸ் பாண்டான 'பியர்ஸ் ப்ராஸ்னன்'-ஐ ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த 'பான் மசாலாவில்', புற்றுநோய் வரைவைக்கக் கூடிய பொருட்கள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. பிராஸ்னன், அதன் விளம்பரத்தில் நடித்ததற்கும் சர்ச்சை எழுந்தது.


இதற்கு, பிராஸ்னன், 'நான் ஒப்பந்தம் செய்யப்படபோது, அது 'மவுத் ஃபிரஷ்னர்' என்று நினைத்துதான் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மக்களுக்கு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களைப் பற்றி நான் அறியவில்லை. சீக்கிரமே எனது படங்களை பான் பஹார் விளம்பரங்களிலிருந்து நீங்கச் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.' என்று கூறினார்.


பான் பஹார் நிறுவனம், 'நாங்கள் போட்டுக் கொண்டு ஒப்பந்தத்தின்படி தான் நடந்து கொண்டோம். எங்கள் பொருள் ஒரு 'மவுத் ஃபிரஷ்னர். இதில், எந்தவித புற்றுநோய் உருவாக்கும் பொருட்களும் இல்லை. விரைவில், ப்ராஸ்னன் மீது நடவிடிக்கை எடுப்பது குறித்து விவாதித்து முடிவுக்கு வருவோம்.' என்று விளக்கினர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ