Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்பாணத்தில் போராட்டம்


யாழ்ப்பாணம் கொக்குவில் சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றபோது, இலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தசம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களை உள்ளே செல்ல விடாமல், போரட்டம் நடத்தப்படுகின்றது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். எனினும், சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close