Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹேர் ஸ்டைலால் கோடிகளில் புரளும் வளர்ப்பு நாய்!

ஆஸ்திரேலியாவில் தனது ஹேர்ஸ்டைலால் வளர்ப்புநாய் ஒன்று இணையதளங்களில் மிகவும் பாப்புலராகியுள்ளது. அது மட்டுமல்லாமல் வளர்ப்பு பிராணிகளுக்கான ஃபுட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு 'ஸ்போக்ஸ் டாக்' ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகரைச் சேர்ந்தவர் லூகே கவாங். இவர் டீ என்ற பிளாக் ஆப்கன் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு ஐந்து வயதாகிறது. இந்த நாயின் சிறப்பு என்னவென்றால், பெண்களைப் போலவே நீண்ட கூந்தலுடன் அழகுற காணப்படும். ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் டீ  கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. அண்மையில், இந்த நாயின் புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் நீண்ட கூந்தல் கவர, லட்சக் கணக்காணோர் டீயின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர். அதனைப் பார்த்துவிட்டு ஏராளமான விளம்பர நிறுவனங்கள் டீயை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்க அணுகி வருகின்றன.

ஆனால் டீயின் உரிமையாளர் இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் மட்டுமே நடிக்க வைக்க தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். முதல்கட்டமாக வளர்ப்பு பிராணிகளின் உணவு தயாரிக்கும் ராயல் கெனின் நிறுவனத்துக்கு 'ஸ்போக்ஸ் டாக்' ஆக டீ நியமிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஹரியாத் அண்டு ஹவுண்ட் என்ற வளர்ப்பு பிராணிகளின் வாசனைத் திரவிய நிறுவனத்துக்கும் பிராண்ட் அம்பாசடாராகியுள்ளது டீ.

இதுகுறித்து டீயின் வளர்த்து வரும் லுகே ஹவாங் கூறுகையில், '' தற்போது டீக்கு ஓய்வு அளிக்கப்பட்டு விட்டது. அதனால் கண்காட்சிகளில் கூட இப்போது பங்கேற்பதில்லை. நாங்கள் வீட்டிலேயே ஓய்வாக அதனை வைத்திருக்கவே கருதுகிறோம். ஆன்லைனில் பாப்புலரான பிறகு, அதற்கு புதிய பணி தேடி வந்துள்ளது. மற்ற  சூப்பர் மாடல்கள் போல புதிய பணியை டீ நிச்சயம் விரும்பும் என்றே நினைக்கிறேன். அதன் சில்வர் நிற கூந்தல்தான் ஆன்லைனில் இந்தளவுக்கு பாப்புலராக்கியிருக்கிறது. டீயை வாக்கிங் அழைத்துச் சென்றால் கூட அதனை பார்க்க ஏராளமான கூட்டம் கூடி விடும். இப்போதைக்கு இரு நிறுவனங்ளுக்காக மட்டும் டீ பணியாற்றும். அனிமல் ஆக்டராக நடிக்க வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்றார்.

- எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ