Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டு சிறை தண்டனை

கலிபோர்னியாவைச் சேர்ந்த 41 வயதானவர்  தன் மகளை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, நீதிமன்றம் அவருக்கு 1,503 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தனது மகள் தன் உறவினர் ஒருவராலேயே பலாத்காரம் செய்ததைக் கண்டிக்காமல், அதை காரணமாக வைத்து தொடர்ச்சியாக 2009 முதல் 2013 வரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த காலகட்டத்தில், ஒரு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் அந்த இளம்பெண். தற்போது அவருக்கு 23 வயதாகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண், 'நான் சிறுமியாக இருந்தபோது, அவரை எதிர்த்து கேள்விகேட்க எனக்கு துணிவில்லாமல் இருந்தது. அதனாலேயே அவரால் இந்த கொடுமை எனக்கு இழைக்கப்பட்டது.' என கூறினார்.

தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும், மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும் 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, 'இதைப்போல் மனிதர்கள் சமூகத்துக்கு மிக ஆபத்தானவர்கள். அவன் முழு ஆயுட்காலத்தையும் சிறையிலேயே கழிக்கட்டும்.' என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close