Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.நா 71-17 ...என்னவா இருக்கும்?

இன்று ஐநா பிறந்த தினம். 1948-ம் ஆண்டில் இருந்து  “ஐக்கிய நாடுகள் தினம்” அக்டோபர் மாதம் 24-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 

இன்று 71 பிறந்தநாள் கொண்டாடும் ஐநா, ”Sustainable Development” என்று கூறப்படும் சர்வதேச வளர்ச்சிக்காக வகுக்கப்பட்டுள்ள 17 இலக்குகளை அடைய மக்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அதை மையமாக வைத்து ”ஐநா 71-17” என்னும் புகைப்படத்தை உருவாக்கி  ஐநா பகிர்ந்து வருகிறது. 

 

 


மனித உரிமைகள், சமூகம், பொருளாதாரம், மனிதாபிமானம் மற்றும் கலாச்சார சவால்களை சமாளிக்க உலகநாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக 1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி, ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டு, 51 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. 

ஐ.நா தலைமையகம் அமெரிக்கா நாட்டின் நியுயார்க் நகரில் உள்ளது. ஐ.நா.வில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுமே (193 நாடுகள்) அங்கம் வகிக்கின்றன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ