Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - 44 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானிலுள்ள குவெட்டா நகரில் உள்ள காவல்துறை பயிற்சிப் பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் பயிற்சி காவல்துறையினர் 44 பேர் உயிரிழந்தனர்.

குவெட்டா நகரிலுள்ள ரியாப் ரோடு பகுதியில் காவல்துறையினர் பயிற்சி மையம் உள்ளது. அதில் சுமார் 600 காவல்துறையினர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அங்கு நள்ளிரவில் புகுந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 44 பயிற்சிக் காவலர்கள் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் பயங்கரவாதிகள் சிறைபிடித்த 600 காவலர்களுள் 250-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  மீட்கப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலுக்கு லக்ஷர்-இ-ஜவாங்கி அமைப்பு மூளையாக செயல்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதி பதற்றத்துடன், பரபரப்பாகவும் சோகமாகவும் காணப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close