Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு 

மலேசியாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவின் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் செய்வதரியாது தவித்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். எனினும் இந்த விபத்தில் 6 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், அங்குள்ள அரசு மருத்துவமனை வார்டை தீவிர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தவும், மலேசிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில், பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயிர் இழப்பு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

தீ விபத்து குறித்து விரைந்து வந்த மருத்தவமனையின் உரிமையாளரான ஜோகூர் சுல்தான் தம்பதியர், விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர்  உத்தரவிட்டுள்ளார்.

 



 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close