Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில் தொடங்க சிறந்த நாடு எது தெரியுமா ?

உலகில் தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில்  சிங்கப்பூரை வீழ்த்தி நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 

உலக வங்கி ”Doing Business 2017” என்னும் தலைப்பில் உலக நாடுகளில் வணிகம் செய்ய சிறந்த நாடுகளை பட்டியலிட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் வகித்து வந்தது. இந்த ஆண்டு நியூசிலாந்து முதலிடம் வகித்துள்ளது.
 
நியூசிலாந்தில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நடைமுறைகள் குறைவு. சட்ட சிக்கல் இல்லாமல் குறுகிய காலத்தில் தொழில் தொடங்கிவிடலாம் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும், டென்மார்க் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அமெரிக்கா கடந்த ஆண்டு ஏழாம் இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு சறுக்கியுள்ளது. இந்தியா கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் 130வது இடத்தில் உள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ