Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலேசியாவில் சிறுமி சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை

மலேசியாவில் ஸ்பெசல் கிளஸ்க்கு போகாத தனது மகளை ரோட்டில் சங்கிலியால் கட்டிப்போட்டு, கொடுமைப் படுத்தும் படம் தற்போது வெளியாகி உள்ளது.

மலேசியாவில் உள்ள சம்வே பிரதான ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி, தினமும் பள்ளிக்கு சென்று வருகிறாள். இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் சிறுமி, பள்ளி முடிந்து ஸ்பெசல் கிளாஸ்சான சைனீஸ் கிளாஸ்சுக்கு போகவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுமியின் தாய், தனது குழந்தையை ரோட்டோரம் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்து வருகிறார். மேலும், பிற்பகல் 3 மணிக்கு கட்டப்பட்ட இந்தச் சங்கிலி, இரவு 10 மணிக்குத்தான் விடுவிப்பேன் என்றும், அவர் மிரட்டியுள்ளதாக, பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தன்னைக் கடந்து செல்பவர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை விடுவிக்க உதவும்படியும், தன்னைக் கடந்து செல்லும் அனைவரிடம் அவர் பரிதாபமாக கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சிறுமியின் தாயை காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ