Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பெயின் பிரதமராக மீண்டும் தேர்வானார் மரியானோ ரஜோய் 

ஸ்பெயின் பிரதமராக 2-வது முறையாக மரியானோ ரஜோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மரியானோ ரஜோய் 2011-ம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மீது எதிர்கட்சியான சோஷியலிஸ்ட் கட்சியினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, கூறிவந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2015 டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டி, பொது வாக்கெடுப்பு நடத்தி பிரதமரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நடந்த பொது வாக்கெடுப்பில், மரியானோ ரஜோய்க்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து மீண்டும் ஸ்பெயின் பிரதமராக மரியானோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ