Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டிகாப்ரியோவின்', 'Before the flood' ஆவணப்படம் வெளியீடு (வீடியோ)

கடந்த வருடம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற லியானார்டோ டிகாப்ரியோ, அவரது இயற்கை ஆர்வத்துக்கும், செயற்பாட்டுக்கும் பெயரெடுத்தவர். அவர், ஐ.நா.வின் அமைதிக்கான தூதராகவும் இருந்து வருகிறார். 

 

இந்நிலையில், புவி வெப்பமாதல் குறித்து அவர் தயாரித்து நடித்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தை, ஒரு வாரத்துக்கு, நேஷனல் ஜியோகிராபிக், யூடியூப் போன்ற வீடியோ தளங்களில் இலவசமாக வெளியிட்டுள்ளார். ஒரு வாரத்துக்கு இந்த ஆவணப்படம் அந்த தளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காப்ரியோ, 'நம் சமகால பிரச்னைகளில் முதன்மையானது புவி வெப்பமாதல். நவம்பர்  எட்டாம் தேதி நடக்கவுள்ள அமெரிக்க தேர்தலில், இந்த பிரச்னைக்கு செவி மடுக்கும் தலைவர் யாரென்று மனதில் வைத்து ஓட்டு போட வேண்டும் என்பதால் தான், தற்போது இப்படத்தை வெளியிட்டுள்ளேன்.' என்றார்
 

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ