Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை அசுத்த காற்றை சுவாசிக்கிறது : யுனிசெஃப்

உலகில் ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை காற்று மாசு அதிகம் உள்ள பகுதியில் வசிப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. அதிலும் தெற்கு ஆசியாவில் வசிக்கும் குழந்தைகள் அதிக பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 300 மில்லியன் குழந்தைகள் காற்று மாசினால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக நிமோனியா  போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.  மேலும் காற்று மாசுபாட்டினால் ஏழை எளிய குழந்தைகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாவதாக யூனிசெஃபின் காலநிலை ஆய்வு நிபுணர் நிக்கோலஸ் ரீஸ் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மொரோக்கோவில் நவம்பர் 7-18 ஆகிய நாட்களில், மாசுக் கட்டுபாடு மற்றும் புவி வெப்பமடைதல் பற்றி கலந்துரையாட 200 நாடுகளுக்கு  யுனிசெஃப் அழைப்புவிடுத்துள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ