Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எமோ(ல்டு)ஜிகள்! இனி ஓல்டிகளுக்கும் எமோஜி


மெசேஜிங் ஆப்களில் முதியோர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எமோஜிக்கள் வேண்டும் என களத்தில் குதித்துள்ளார் ஒரு பிரிட்டிஷ் பாட்டி.

எமோட்டிகான், எமோஜி பற்றி...

கீ-போர்டிலுள்ள காற்புள்ளி, அரைப்புள்ளி, அடைப்புக்குறிகளை பயன்படுத்தி முகபாவங்களை உருவாக்கினால் அது எமோட்டிகான் (emoticon) {~_~}, அதே முகபாவங்களை குட்டிக்குட்டி படங்களால் செய்தால் அது எமோஜி(emoji)☺.

எமோஜி மற்றும் எமோட்டிகான் ஆகிய வார்த்தைகள் ஜாப்பனீசிலிருந்து எடுக்கப்பட்டவை.ஜாப்பனீசில் எ(e) என்பது படம் மற்றும் மோஜி(mohi) என்பது குறிகளை(characters) குறிக்கும்.2013ல் எமோஜி என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது.தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமோஜிக்கள் புழக்கத்தில் உள்ளன.

பிரிட்டிஷ் பாட்டியின் புகார்!

இந்நிலையில் தான் பிரிட்டிஷை சேர்ந்த 56 வயதான டயானா ஹில் என்ற மூதாட்டி,ஃபேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் ஆப்களில் உள்ள எமோஜிகள் இளைஞர்களின் எண்ணங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன.எங்களை போன்ற முதியோர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும்படியான எமோஜிகள் வேண்டும் என யுனிகோடு கூட்டமைப்பில்(unicode consortium) புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்ததோடல்லாமல் தானே முன்வந்து எமோஜி தொகுப்பினை உருவாக்கவும் தொடங்கியுள்ளார்.
எமோல்(டு)ஜிகள்!

அமெரிக்காவின் 42 வயதான ஓவியக்கலைஞர் கிறிஸ் ஆக்ஸன்பரியுடன்(chris oxenbury) சேர்ந்துதான் இந்த எமோஜிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ஹில் பாட்டி.

கிறிஸ் தான் இந்த வகை எமோஜிக்களுக்கு எமோல்(டு)ஜிகள்(emoldjis) என பெயரிட்டிருக்கிறார்.இது குறித்து ஹில் பாட்டி,"ஒரு முறை கறுப்புப்பெண் எமோஜிக்கு பதிலாக கறுப்பு poo எமோஜி அனுப்பி விட்டேன்.அதன்பிறகுதான் இந்த யோசனை வந்தது"என்கிறார்.

முதுகுவலி, ஞாபகமறதி போன்ற முதியோர்(!) பிரச்சனைகளை பிரதிபலிக்கும் எமோல்(டு)ஜிகளுக்கு இப்போதே லைக்ஸ் குவிகிறது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்???

எமோல்(டு)ஜிகள் உருவாக்கம் முழுமையாக முடிந்த பின்னர்,யுனிகோடு கூட்டமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு,ஒப்புதல் பெற்றவுடன் அடுத்த ஆண்டில் இந்த வகை எமோஜிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் முதியோர்களிடையே மெசேஜிங் ஆப்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#அப்புறம் என்ன ப்ரெஞ்ச்? உடனே உங்க வீட்ல இருக்க தாத்தா பாட்டிகளுக்கு ஆளுக்கொரு ஐபோன் பார்சல் சொல்லிட வேண்டியதுதானே

- ரா.கலைச்செல்வன்
(மாணவப் பத்திரிகையாளர்)

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close