Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரை வரும் 15-ம் தேதி வரை காவலில் வைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ராமர், முனியசாமி, ராஜேந்திரன், மற்றொரு முனியசாமி ஆகியோர் இன்று கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 4 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 15-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ